
நடிகைகள் என்றாலே சர்ச்சைக்குரிய விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. அவர்களுக்கும் ஒரு பர்சனல் வாழ்க்கை உள்ளது என்பதை பலபேர் புரிந்துகொள்வதில்லை.
தொல்லை கொடுக்கும் சில ரசிகர்கள், நபர்களை அப்போதே எதாவது பேசி தங்களது கோபத்தை காட்டுவார்கள் சில நடிகைகள். ஆனால் பிரபல பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர் தன்னை பலமுறை தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவரை வித்தியாசமாக தண்டித்துள்ளார்.
அவர் ஒரு பிரபல நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது அந்த நபர் மீண்டும் அந்த இடத்திலும் பின்தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் அந்த நபரை மேடைக்கு அழைத்த ஷ்ரத்தா, இவர் தான் என்னை ஒரே நாளில் 17 முறை பின்தொடர்ந்த நபர் என்று ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார். பின்னர் அந்த நபரை கட்டிப்பிடித்தார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த நபர் அவமானத்தில் தலைகுனிந்தார் .