NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

பார்த்திபன் இயக்கத்தில் அஜித்-விஜய்-ஜெயம்ரவி?


பார்த்திபனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் அஜித், விஜய் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் பொருத்தமான கதை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
 
ஜெயம் ரவிக்கு பொருத்தமாக இரண்டு கதைகள் வைத்துள்ளதாகவும், இரண்டுமே ஜெயம் ரவிக்கு பிடித்துள்ளதாகவும் கூறிய பார்த்திபன் இந்த இரண்டு கதைகளில் ஒன்றை மிக விரைவில் தேர்வு செய்து திரைப்படம் ஆக்குவோம் என்று கூறியுள்ளார்.
 
அதே போல் அஜித், விஜய் உள்பட அனைத்து நடிகர்களுக்கும் தன்னிடம் கதை உள்ளதாக பார்த்திபன் கூறினார். மேலும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்காக முதலில் நடிகர் ஆர்யாவை தான் அணுகியதாகவும், ஆனால் அவர் வேறொரு படத்தில் நடித்து கொண்டிருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அதன்பின்னர் தான் சாந்தனுவை தேர்வு செய்ததாகவும் கூறினார்.
 
பார்த்திபன் வைத்துள்ள அஜித், விஜய், ஜெயம் ரவிக்கான கதைகள் திரைப்படம் ஆவது எப்போது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.