சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படத்தில் தனது நிகழ்ச்சியை கிண்டல் செய்துள்ள ஆர்.ஜே. பாலாஜிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் செம டோஸ் விட்டுள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் கடவுள் இருக்கான் குமாரு. இந்த படத்தில் பாலாஜி லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை டிவி நிகழ்ச்சியை பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் கலாய்த்துள்ளார். இதை பார்த்த லட்சுமி கோபம் அடைந்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பாலாஜி : ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளவர்கள் சினிமா மூலம் மற்றவர்களை கிண்டல் செய்வது கவலையாக உள்ளது. @RJ_Balaji
கிண்டல்
@RJ_Balaji சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது நீங்கள் விளம்பரத்திற்காக நடித்து ஹீரோவானீர்கள் என்று நான் கிண்டல் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
பாட்டில்
சில இயக்குனர்களும், நடிகர்களும் படங்களில் தவறான ரோல் மாடல்களை அளித்து வருகிறார்கள். தமிழ் இளைஞர்கள் பாட்டில், அரியர்கள் மற்றும் பெண்களை தாண்டி வளராதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ் உங்களுக்கு என் அடுத்த படத்தில் அருமையான கதாபாத்திரம் தருகிறேன். அது உங்களுக்கும், உங்களை பின்தொடரும் வாலிபர்களுக்கும் நல்லது செய்யும் கதாபாத்திரமாக இருக்கும். நடிக்க ரெடியா?
நிகழ்ச்சி
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி சரியில்லை என்றால் 1000 எபிசோடை தாண்டி இருக்குமா? நானே 1000 எபிசோடுகளை முடிக்கிறேன். மக்கள் முட்டாள்கள் அல்ல.
கோழை
அமைதி காப்பது அறிவாளித்தனம் அல்ல. என்னை பொறுத்த வரையில் அது கோழைத்தனம், பாசாங்கு செய்வது @RJ_Balaji