பாலிவுட்டில் வெளிவந்த ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘குயின்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் வாங்கியிருந்தார். இந்நிலையில், இப்படத்தை ரேவதி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுதவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் கங்கணா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? என்ற பெரிய கேள்வி எழுந்து வந்தது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படம் ரீமேக்காக இல்லாமல் தமிழுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களையும் செய்யவிருக்கிறார்களாம். திருமணத்திற்கு முதல் நாள் நாயகியின் திருமணம் நின்றுபோக, தனது தேனிலவிற்கு வாங்கிய டிக்கெட்களை எடுத்துக் கொண்டு கதாநாயகி வெளிநாடு போகிறாள். அந்தப் பயணத்தில் ராணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, மீண்டும் இந்தியா திரும்பும் நாயகி திருமணம் குறித்து எடுக்கும் முடிவு ஆகியவை தான் படத்தின் கதை.
கடந்த 2014ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருது இப்படத்திற்கு கிடைத்தது. மேலும் இப்படம் ரூ. 110 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.