இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் கேப்டன் கோஹ்லி பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து ஊடகம் வீடியோ வெளியிட்டுள்ளது.
பொதுவாக டெஸ்ட் போட்டி முடிந்த 5 நாட்களில்தான் இதுபோன்ற புகாரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புகார் கொடுக்க இயலும். ஆனால் 10 நாட்கள் கழித்து இங்கிலாந்து மீடியா பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் இங்கிலாந்து வீரர்கள் இதுபற்றி எதுவும் முறையிடவில்லை.
இந்த நிலையில் இங்கிலாந்து மீடியாவின் இந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, விராட் கோஹ்லி பந்தை சேதப்படுத்தவில்லை. பொதுவாகவே இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தவுடன் சில விஷயங்களில் பிரச்னையை கிளப்ப முயற்சிக்கும் இதை வீரர்களுக்கு பதிலாக இங்கிலாந்து மீடியா செய்துள்ளன. தோல்வியை ஒப்பு கொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் நாம் தோற்றால் தோல்விக்கு சாக்கு போக்கு சொல்ல மாட்டோம். நாங்கள் சரியாக விளையாடாததால்தான் தோற்றோம் என்று தோல்வியை ஒப்பு கொள்வோம் என கூறி உள்ளார்.