இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன் எடுத்து இருந்தது. விராட் கோஹ்லி 151 ரன்னுடனும், அஸ்வின் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று விராட் கோஹ்லி இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 167 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இன்றைய ஆட்டத்தில் அவர் இரட்டை சதம் அடித்து இருந்தால் புதிய சாதனை ஒன்றை படைத்து இருப்பார்.
ஒரே ஆண்டில் 2 இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை கோஹ்லி வசம் வந்து இரு’கும். ஆனால் 167 ரன்னில் வெளியேறிதன் மூலம் மயிரிழையில் கோஹ்லி அந்த சாதனையை தவற விட்டுள்ளார்.
ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரட்டை சதம் அடித்து இருந்தார் கோஹ்லி. கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் இரட்டை சதம் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.