பிரேமம் சாய்பல்லவி பற்றி சமீபத்தில் சில கிசுகிசுக்கள் வந்தது. இது குறித்து பேசிய அவர், எப்படி இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை. தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் யாரும் என்னை அழைக்கவில்லை. வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என கூறினார்.
தற்போது அவருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டியுள்ளது. கரிகாலன் படத்துக்காக ஏற்கனவே கொடுத்திருந்த கால்சீட்க்கு பதிலாக விக்ரம், இப்போது வாலு படத்தை எடுத்த விஜய்சந்தர் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது.
இதில் கீர்த்தி சுரேஷ் மிகவும் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக சாய்பல்லவியை ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
வடசென்னை மையப்படுத்திய கதையை கருவாக கொண்டு இப்படம் எடுக்கப்படுகிறதாம். இதில் சூரி, யோகி பாபு, சமுத்திரக்கனி என முக்கியமானவர்களும் நடிக்கிறார்களாம்.