சீயான் விக்ரமின் மகன் துருவ்….! பெயருக்கு ஏற்ற மாதிரியே செம க்யூட்.. மகனை பெரிய இயக்குனர்கள் படத்தில் அறிமுகம் செய்ய காத்திருக்கிறார் விக்ரம்..!
அது ஒரு புறம் இருக்க.. அழகுப் பொண்ணுங்க மனசுல பச்சக்குனு ஒட்டிகிட்டார் துருவ். அடையாளம் தெரியாமல் என்னதான் பைக் ஓட்டினாலும் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் போன்ற இடங்களில் பொண்ணுங்க பார்த்துவிடுகிறார்கள்.
ஏய் ..சீயான் பையன் துருவ் என்று கூச்சல் போட..கூட்டம் கூடி விடுகிறது..! துருவ் மிரண்டு போகிறான்.
அதற்குள் சுற்றி வளைத்து விடுகிறார்கள் அழகிய ராட்சஷிகள்..! கிள்ளுவது..கொஞ்சுவது என கலாட்டாக்களில் ஈடுபட பையன் தெறித்து ஓடுகிறான்.
விடாமல் பைக் வரை விரட்டுகிறார்கள்..! ஒரு காபி ஷாப் போனான் துருவ்..! அங்கும் இதே கலவரம்..!
இப்போது சேப்டியாக காரில் சென்று வருகிறான் அழகுப் பையன் துருவ்..! ஆனால், அப்பா விக்ரமிற்கு வேறு கவலை.
மகனை எப்படியாவது ஹீரோ ஆக்கி விட வேண்டும் என்பதே கவலை. ஓப்பனிங் சரியில்லேன்னா, பினிஷிங் ரொம்ப மோசமாக இருக்கும் என்பதை இத்தனை வருஷ சினிமா அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியாதவரா விக்ரம்?
அதனால் துருவ்வை ஷங்கர் அல்லது மணிரத்னம் படங்களில் மட்டுமே அறிமுகப்படுத்த வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருந்தார்.
ஆனால், ஷங்கரின் சினிமா பிசினஸ், பெரிய ஹீரோக்களுடன் இணைந்தாலொழிய அவர் செய்யும் செலவுகளுக்கு கட்டுப்படியாகாதல்லவா?
அதனால் ஷங்கர் “பார்க்கலாம்…” என்று ஒற்றை வரியில் விவகாரத்தை முடித்துவிட, மணிரத்னத்தின் மன ஓட்டம் துருவ் பக்கம் திரும்புவதற்காக காத்திருக்கிறார் விக்ரம்.
நடுவில் துருவ் இயக்கிய குறும்படம் ஒன்று வெளியாகி அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்ததுதான் இந்த விவகாரத்தின் அற்புத திருப்பம்…! இப்போது அந்த அழகுப் பையன் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். அப்பாவிற்கு கதை சொல்லிவிட்டு காத்திருக்கிறார்..!