NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்...!


வைரஸ் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும்.அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும்  வரை வைக்க வேண்டும்.

டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும்.பழைய டயர், தூக்கி வீசிஎரியபட்ட பூச்சாடி,பிளாஸ்டிக் பைகள்,கேன்களில் தண்ணீர் சேராதவரு பார்க்கவேண்டும்,.தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி விடவேண்டும்.

வீட்டில் உபயோகபடுத்தாத கழிவறைகளில், கொசு இனவிருத்தி செய்யும் வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி கழிப்பிடங்களை, அடிக்கடி சுத்தம் செய்து, கழி பீங்கான்களை மூடி வைக்கவேண்டும்.
தண்ணீர் கஷ்ட காலங்களில், தண்ணீரை பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் பார்த்து  கொள்ளவேண்டும். அதை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். பொதுவாக இந்த கொசுவின் வாழ்கை சுழற்சி ஏழு  நாள் ஆதலால், எந்த தேங்கும் சுத்தமான நீரும் ஏழு நாளை தாண்டினால், அது கொசு இனபெருக்கம் செய்து தனது வழக்கை சுழற்சியை  முடித்து பரவ எதுவாக அமைந்து விடும்.
நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட்டில் ஏசி, குளிர்சாதனப்பெட்டி மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்கமல் அவ்வபோது நீக்கி  விடவேண்டும்.
கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளை பயன்படுத்தலாம்,.. வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்து கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகபடுத்தலாம்.. ஆனால் சிலருக்கு இது சுவாச  அலர்ஜி ஏற்படுத்தலாம்.
உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகபடுத்தலாம். அனால் தோல் அலர்ஜி இது உண்டு பண்ணலாம். இந்த கொசு  பகல் நேரத்தில் அதிகம் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும் .
அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம்
நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வா வை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.
டெங்கு வராமல் தடுக்க கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலமே இதை தடுக்க ஒழிக்க முடியும்.


சமீபத்திய சுகாதார செய்திக்கு, இந்த இணைப்பைப் பயன்படுத்தி எங்களைப்  Facebook Twitter  , Google plus இல் பின்தொடரவும்.