NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

விஸ்வாசத்திற்கு அடுத்ததாக அஜித் இந்த படத்தின் ரீமேக்கில் தான் நடிக்க உள்ளாரா? ரசிகர்களுக்கு செம ட்ரீட்

விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படம் இதுதான்..!!

தல அஜித் தற்சமயம் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிவடைய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இது மட்டுமில்லாமல் அஜித்தின் அடுத்த படத்திற்கான தகவல்களும் வந்திருந்தன. அதில் இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அல்லது யுவன் ஷங்கர் ராஜா என கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஏற்கனவே நமது தளத்தில் பார்த்திருப்பீர்கள்.
இப்போது புதியதாக இப்படம் இந்தியில் கடந்த 2016ல் அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரிமேக் தானாம்.
இதில் வக்கீலாக அமிதாப் பச்சன் நடித்திருந்த வயதான வேடத்தில் தான் அஜித் நடிக்க உள்ளாராம். விரைவில் தொடங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தான் அஜித் இன்னும் அந்த தாடி மீசையை நீக்காமல் உள்ளாராம்.

சமீபத்திய சினிமா செய்திக்கு, இந்த இணைப்பைப் பயன்படுத்தி எங்களைப்  Facebook Twitter  , Google plus இல் பின்தொடரவும்.