அருண் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல் ஹாசன்நேற்று வெளியிட்டுள்ளார்.
‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். அதையடுத்து ‘பிரியம்’ உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இருந்தாலும் அவரால் முன்னணி ஹீரோ இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்தப் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோருடன் இணைந்து அருண் விஜய் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
இதற்கு முன்னதாக அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருந்தது அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதாரு அதாரு பாட்டில் கூட அருண் விஜய்க்காக தான் இந்த பாடல் என சொல்லி உற்சாகப்படுத்தி விட்டாராம்.
இந்நிலையில் ‘மூடர் கூடம்’ பட இயக்குனர் நவீனுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உலக நாயகன் கமல் ஹாசன் நேற்று வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு அக்னி சிறகுகள் என்று டைட்டில் வைத்துள்ளனர். இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அருண் விஜய் டுவிட்டரில் கூறியுள்ளார். இப்படத்தில், நட்புக்காக விஜய் ஆண்டனியும் நடிக்கிறாராம்.