NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

அடுத்தடுத்து படப்பிடிப்பை தொடங்கும் தல – தளபதி!

விஸ்வாசம், சர்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து தல, தளபதி புதிய படங்களின் படப்பிடிப்பை தொடங்கயிருக்கின்றனர்.

after sarkar thalapathy vijay starts his 63rd movie with director atlee

விஸ்வாசம், சர்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து தல, தளபதி புதிய படங்களின் படப்பிடிப்பை தொடங்கயிருக்கின்றனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவரது நடிப்பில் அரசியல் பின்னணிக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சர்கார் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிக்கயிருக்கிறார். இந்த கூட்டணியில் வந்த தெறி, மெர்சல் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்த படமும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோயின் தேடுதல் தற்போது நடந்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது என்று தகவல் தெரிவிக்கின்றது. 

இவரைத் தொடர்ந்து வரும் பொங்கல் தினத்தன்று தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து நடிக்கும் புதிய பட்மும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இப்படத்தை இயக்கயிருப்பதாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கயிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

இப்படத்திற்கு இசையமைக்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறது தகவல், தல அஜித்திற்கு 59வது படமான இப்படம் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இவர்களைத் தொடர்ந்து அடுத்த வரிசையில் சூர்யா இருக்கிறார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தை முடித்துவிட்டு அடுத்துகட்டமாக கேவி ஆனந்த் இயக்கத்தில் புதிய படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்பட்த்தைத் தொடர்ந்து இறுதிச் சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இது சூர்யாவுக்கு 38வது படமாகும். அடுத்தவருடம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிற்து என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து நம்ம சூப்பர்ஸ்டார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட பட்த்தில் நடித்து முடித்துள்ளார். இப்பட்த்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், அரசியல் நடவடிக்கைகளையும் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார்.