இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் இங்கிலாந்து அணிக்கு 110 அண்டுகளுக்கு பின் பெரும் அவமானத்தை தேடி தந்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகள் இடையே விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், 110 ஆண்டுக்கு பின் ஒரு அவமான சாதனையும் படைத்துள்ளது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் இரண்டு இன்னிங்ஸிலும் முதல் பந்திலேயே கிங் பேர் முறையில் அவுட்டானதே இங்கிலாந்து அணியின் அவமானத்திற்கு காரணம்.
இதற்கு முன் 1906லஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர், ஹேய்ஸ், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கிங் பேர் முறையில் அவுட்டானார். அதன் பின்னர் சுமார் 110 ஆண்டுகளாக இந்த முறையில் எந்த இங்கிலாந்து வீரரும் அவுட்டானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.