இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடந்தது. இதில் இந்தியா 246 ரன்கள் வித்திசாயத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து கேப்டன் கோஹ்லி கூறும்போது, குக் மற்றும் ஹமீது தடுப்பாட்டம் விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருப்பார்கள் என்று நினைத்தோம். எனவே அவர்களது தடுப்பாட்டம் எங்களது பொறுமையை சோதிப்பதாக இருந்தது.
எங்கள் பொறுமையை இழந்தோம். பல்வேறு திட்டங்களுடன் பந்து வீசினோம். இதுவரை மேற்கொள்ளாத பல்வேறு முயற்சிகளை செய்தோம். இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பின்னர்தான் எங்களுக்கு நம்பிக்கை வந்தது.
நீண்ட நேரம் பீல்டிங்கில் மாற்றம் செய்யாமல் இருந்தோம். கடைசி நேரத்தில் தான் புஜாரா ஒரு யோசனை சொன்னார். அதன்படி பீல்டிங்கில் மாற்றம் செய்தோம். லெக் சைடில் இருவரை கூடுதலாக நிறுத்தினோம். அதற்கு பலன் கிடைத்தது. விக்கெட்டும் விழுந்தது என்றார்.