வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’ படங்களுக்குப் பின் சுசீந்திரன்-விஷ்ணு விஷால் கூட்டணியில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படம், ‘மாவீரன் கிட்டு’. இந்த படத்திற்கு இமான் இசைமைத்துள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டத்தில் 1985ம் ஆண்டு வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இந்த திரைப்படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது. தனது ஊர் மக்களை எப்படியாவது முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முன்னைப்புடன் கலெக்டர் வேலைக்கு படித்து வரும் மாணவன் கிட்டு . அவனை சுற்றி நடந்த உண்மை சம்பவங்களை கொஞ்சம் கற்பனை கலந்து எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.
இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். மேலும் சூரி, ஸ்ரீதிவ்யா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.