பைரவா படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிந்துவிட்டது. அடுத்து விஜய்யின் 61வது படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. முதலில் சாதாரணமாகத்தான் பூஜையை வைத்துக் கொள்ளலாம் என விஜய் கூறினாராம். ஆனால் அட்லீக்கு அடுத்த ஷங்கராகும் ஆசையை அடக்கமுடியவில்லையாம். விளைவு, நேரடியாக ஹாலிவுட்டுக்கே படை பரிவாரங்களுடன் கிளம்பப் போகிறார்.
இளையதளபதி விஜய் பைரவா படத்தை முடித்த பிறகு அட்லீ இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றனர். ஆம், விஜய்யின் 61வது படத்தின் ஆரம்ப படப்பிடிப்பே ஹாலிவுட்டில்தான். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் முதல் நாள் ஷூட்டிங் நடக்கப் போகிறதாம்
ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களான ‘லைட்ஸ் அவுட்’, ‘கான்ஜுரிங் 2’, ‘பேட்மேன் vs சூப்பர் மேன்’, ‘காட்ஸில்லா’, ‘ஹாரிபாட்டர்’, ‘இன்செப்சன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவின் பங்களிப்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், தற்போது வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் படமாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை விஜய்-அட்லி படம் பெறப்போவதாகவும் கூறப்படுகிறது.
விஜய் குடும்பத்துடன் ஒரு சின்ன ஃபாரின் ட்ரிப்பை முடித்துக் கொண்டு வந்த பிறகு 61 வது படத்தின் வேலைகள் தொடங்க உள்ளன.