சென்னை: நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக்கு நடிகை ராதிகா சவால் விடுத்துள்ளார். நடிகர் சங்க தலைவராக இருந்தபோது சரத்குமார் ஊழல் செய்ததாக சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் குற்றம் சாட்டினார். ஊழலுக்கான ஆதாரங்களை வெளியிடுவுதாகவும் கூறி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நிரந்தரமாக நீக்கி நேற்று நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் முடிவெடுத்தது.
இந்த சூழலில் ராதிகா கார்த்திக்கு ட்விட்டர் மூலம் சவால் விடுத்துள்ளார். இது குறித்து ராதிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்த பிரச்சனையை ட்விட்டரில் தெரிவிக்க விரும்பவில்லை. ட்வீபிள்ஸ் மன்னிக்கவும். ஆனால் இது என் அறிக்கை மற்றும் நிரூபிக்குமாறு கார்த்திக்கு நான் விடுக்கும் சவால் என தெரிவித்துள்ளார்.