இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
கேப்டன் கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி சிறப்பான முறையில் வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு சுமையதானதா என்பது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறும்போது,
கேப்டன் பொறுப்பில் நான் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால் 5 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குவது சவாலாக இருக்கிறது. மேலும் எனக்கான பொறுப்பு அதிகமாக இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர்தான் கேப்டன் பதவி சுமையாக உள்ளதா என்பதை கணிக்க முடியும். நமது திட்டங்களை சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படுத்தினாலே போதுமானது என தெரிவித்து உள்ளார்.