NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

பெண்களால் தடுமாறிப்போன யுவன்…மீண்டும் ஒரு குட்டி பெண்ணால்…மீண்டெழுந்த அதிசயம்…சூப்பர்!



இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா, அப்பாவின் இசை அறிவை அப்படியே டவுன்லோட் பண்ணி வந்தாலும்…அதிர்ஷ்டம் அடித்தது என்னவோ இளைய மகன் யுவன்சங்கர் ராஜா.
அம்மா பிள்ளையாக இருந்து, அம்மாவின் அன்பு கூட்டுக்குள்ளேயே வளர்ந்த யுவன் நிறைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டு இருந்தார். அவருக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். என்ன காரணமோ…கொஞ்ச நாளில் விவாகரத்து செய்தார் .


அதன் பின் அவரே ஒரு பெண்ணை விருப்பப்பட்டு மணந்தார். அதுவும் அவருக்கு சரியாய் அமையவில்லை.அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. அடுத்து அவரது அம்மாவும் இறந்துபோனார்.

அவ்வளவு தான் ஏற்கனவே தன் வாழ்வில் பெண்களால் தடுமாறிக்கொண்டு இருந்த யுவனுக்கு …ஆதரவாய் இருந்த அவரது அம்மாவும் தவறிப்போக…மனம் வெறுத்து அலைந்த யுவனை நிறுத்தி பிடித்தது இஸ்லாம்.

பின் இஸ்லாத்தை சேர்ந்த வரை தன் மனைவியாக்கி, இன்றைக்கு ஒரு குட்டி தேவதையை தன் அம்மா பிறந்த நாளிலேயே பெற்றெடுத்தார் யுவன்.

யுவன் விட்ட இடத்தில் அனிருத், சந்தோஷ் நாராயணன் என்று புது புது இசையமைப்பாளர்கள் இருந்தபோதும் இன்றைக்கு கையில் வைத்திருக்கும் படம் மொத்தம் 15.