NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

ஆத்திரப்பட்டு…அடுத்த படத்துக்கு கால்சீட் …ஆத்தி…எம்புட்டு சாமர்த்தியம்…அதிசயிக்கும் கோலிவுட்…


கடவுள் இருக்கான் குமாரு படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை ரியாலிட்டி ஷோ போல ஒரு ஷோவை கிழி கிழி என்று கிழித்தார்கள்.
இந்த கான்சப்டை கொண்டு வந்தவர் இயக்குனர் ராஜேஷ்.லட்சுமி ராமகிருஷ்ணன் போன்று நடித்தவர் ஊர்வசி. ஹீரோவாக நடித்தவர் ஜி.வி.பிரகாஷ். கூட நண்பனாக நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. ஹீரோயின் இந்த மீம்ஸ் ஷோவில் ஆனந்தி நடித்தார். அவரது அப்பாவாக பாஸ்கர். இந்த ஷோவின் டைரக்ட்டராக மனோபாலா.

இத்தனை பேர் நடித்திருந்தும், இந்த படத்தில்,’ தான் பொது சேவையாக செய்யும் இந்த நிகழ்ச்சி பற்றி மீம்ஸ் செய்துவிட்டார்கள்” என்று கோபமானார் லட்சுமி. அவர் ட்வீட் செய்து கோபப்பட்டது நண்பனாக வந்த ஆர்.ஜே.பாலாஜி மீது.
அவர் பேசவில்லை என்றபோதும்,’என்ன, நீ இன்னும் பதிலே போடலை? கோழைத்தனம்” என்று ஒரு எகிறி எகிறினார்.
இந்த கான்சப்ட்டை எடுத்த இயக்குனர், அவரைப்போல நடித்த ஊர்வசி என்று எல்லோரையும் விட்டுட்டு,ஓரமாய் உடகார்ந்து நாலு டயலாக் பேசின பாலாஜியை வாருறீங்களே? என்று டென்ஷன் ஆகி ரசிகர்கள் கமெண்ட் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.
இயக்குனர் மன்னிப்பு கேட்க, நடுவில நடந்தது தான் சாமர்த்தியம்.
ஜி.வி.பிரகாஷிடம் அடுத்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் சொல்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்ட லட்சுமியை கண்டு அதிசயிக்கிறது கோலிவுட்.