NEWLY ADDED


NEWLY ADDED : *** PREMIUM PLOTS OPEN FOR BOOKINGS IN MADURAI HEART OF CITY ***

Translate

பி.சி.சி.ஐ நிர்வாகிகளை கூண்டோடு கலைக்க உச்ச நீதிமன்றத்தில் லோதா கமிட்டி பரிந்துரை !!


பி.சி.சி.ஐ நிர்வாகிகள் அனைவரையும் நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் லோதா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
கிரிக்கெட்டில்  நடைபெறும் முறைகேடுகளை களைந்து அவற்றில் சீர்திருத்தங்களை கொண்டுவர உச்சநீதிமன்றம் முடிவு செய்து இதற்காக முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
லோதா கமிட்டி அமைக்கப்பட்டதிலிருந்து லோதா கமிட்டிக்கும் பி.சி.சி.ஐ நிர்வாகிகளுக்கும் மோதல் வலுத்து வருகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் லோதா கமிட்டி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பி.சி.சி.ஐ  நிர்வாகிகள் அனைவரையும் நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக மத்திய முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளையை சிறப்பு பார்வையாளராக நியமித்து, தணிக்கை மற்றும் ஊழியர் நியமன அதிகாரங்களை அவருக்கு வழங்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில்  லோதா குழு பரிந்துரை செய்துள்ளது.