நமது உடம்பில் பல வகையான நோய்கள் வருகின்றன. அவ்வாறு வரும் நோய்களை சில சமயங்களில் நாம் உதாசீனப்படுத்தி விடுகின்றோம். மேலும் தோல் வியாதிகள் பல வகைகளில் நமக்கு வருகின்றது.
தோலில் சிறு கட்டிகள் போன்று வளர்வது நமக்கு தெரியாமலேயே கூட இருக்கலாம். அவ்வாறு ஏற்படும்போது உடனடியாக டாக்டரிம் சென்று பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.
சருமத்தின் தோலானது சுத்தமற்றதாக இருந்தால்கூட நமக்கு இது போன்ற பிரச்சனைகள் வரவாய்ப்புள்ளது. மது அருந்துவது, புகைப்பிடிப்பது மற்றும் உணவுகளில் கட்டுப்பாடு இல்லாதவர்களுக்குகூட பல வித கட்டிகள் வரவாய்ப்புள்ளது.
கொழுப்புக் கட்டிகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பதை பார்ப்போம்?
* கொழுப்பு கட்டிகள் நமது உடம்பில் சிறுசிறு கொழுப்புகள் ஒன்றாக சேரும்போது கட்டிகளாக வளர்கிறது.
* கொழுப்பு கட்டி என்பது அனைவருக்கும் ஏற்படுவது இல்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இதுபோன்று ஏற்படுகிறது. அவ்வாறு வளரும் கட்டியானது 20செ.மீ வரை வளரக்கூடியதாக இருக்கும்.
* நமது பரம்பரையில் யாருக்கேனும் இது போன்று கட்டிகள் இருந்தால் அவை மரபணு மூலம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது.