விஜய்யின் சர்கார் பட ரிலீஸை யாராலும் தடுக்க முடியாது © crick247.blogspot.com |
விஜய்யின் சர்கார் படம் தான் தமிழில் வெளியாக போகும் ஒரு பெரிய படம். படத்திற்கான வியாபாரம் பெரிதாக இருக்க படமும் பாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் என எல்லோரும் நம்புகின்றனர்.
படம் தீபாவளிக்கு மட்டும் தான் தெரிகிறது எந்த தேதி என்று இன்னும் தயாரிப்பு குழு அறிவிக்கவில்லை. இந்த நேரத்தில் சர்கார் என்னுடைய கதை, வெளியிட அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு வர ரசிகர்கள் பயந்தனர்.
ஆனால் சர்கார் பட தயாரிப்பு குழு எச்சரிக்கை மனு அளித்துள்ளனர், அதாவது தங்களை கேட்காமல் சர்கார் படத்திற்கு தடை விதிக்க கூடாது என மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த நேரத்தில், வருண் தாக்கல் செய்த வழக்கில் அக்டோபர் 30ம் தேதிக்குள் பதிலளிக்க தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மற்றும் தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.